Sunday, February 15, 2026

Union Government Pay Commission

 In My Gov Portal, the Pay Commission has released a charter of 18 questions regarding our views towards 8th Pay Commission. But we are not at liberty to place an elaborated text on the website itself and not allowed any form of communication except this website only and that too within 200 words. 

Within this constrained position, I have submitted a report as noted below:

·  Fitment Table: Pensioners should be granted an identical fitment table equal to active employees to maintain equity. A projected factor of pension raises from old 2.57 to more would sustain the purchasing power since 2026.

·  Health Care is the new burden: For pensioners, healthcare costs have replaced housing as the primary expenditure. The Fixed Medical Allowance (FMA) should be significantly hiked or replaced with a mandatory, cashless, and comprehensive nationwide health insurance that includes private hospitals.

·  Restoration of Commuted Pension: The period for restoration of commuted pension should be reduced from 15 years to 12 years, as the government recovers the principal and interest much earlier due to current interest rate structures.

·  Tax-Free Pension : The Commission should recommend for a total income tax exemption specifically for pensioners, and the fiscal deficit, due to implementation of the above all, may easily be controlled, if the heavy tax concessions and rebates to the corporate Companies and big business houses are limited or curtailed.

 


Wednesday, September 4, 2024

களஞ்சியம் நமக்கான மென்பொருள்.


தமிழ் நாட்டில் உள்ள சுமார் மூன்று லட்சம் ஓய்வூதியர்களின் விவரங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றிய ஒரு மென்பொருள், அதுவும் மிடுக்கு பேசியில்(Smart phone) சரிபார்க்க முடியும் என்பது அறிவியலின் பாய்ச்சலே காரணமாகும். எங்கும் எதிலும் கணினி தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் அவைகளுடன்  இணைத்து பயணப்படுவதே சாலச்சிறந்ததாகும். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன், திரு.ராஜிவ்காந்தி அவர்கள் ஒன்றிய அரசின் பிரதம அமைச்சராக இருந்த போது துவக்கப்பட்டது. 21 ஆம் நூற்றண்டை நோக்கி என்று அரசின் அனைத்து துறைகளையும் கணினி மயமாக்கப்படுதல் என்ற திட்டம். துவக்கத்தில் இத்திட்டம் சந்தித்த எதிர்ப்பானது சொல்லிமாளாது. தமிழ் நாடு அரசும் ஒன்றிய அரசின் வழியில் செயல்படுத்த முனையும் போது அன்றைய அரசு ஊழியர்சங்கம் மிககடுமையாக எதிர்த்தது, போட்டி சங்கம் நடத்த வேண்டிய நிலையில் இருந்த அரசுப்பணியாளர் சங்கமும் இணைந்து எழுப்பிய குரலில் என்னுடைய குரலும் அச்சிரம் பிசகாமல் கலந்து ஒலித்தது உண்மையே. காலம் கடந்து ஞானம் பிறந்தது போல கணினி இல்லா வாழ்வு காற்றை இழந்த உயிர் போலாகும் என்பதை எனது அறிவாலும் அனுபவத்தாலும் கண்டுணர்ந்த உண்மையாகும்.

கணினியின் குறு வடிவமே செல்லிடப்பேசி அல்லது மிடுக்கு பேசியாகும். இன்று செல்லிடபேசி இல்லாத கரங்களே இல்லை என்ற வகையில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் செல்லிடப்பேசியை பயன்படுதுவதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் தவிப்புகள் தற்போது பெருமளவில் குறந்துவிட்டது கண்கூடு. புதிய நடைமுறைகள் துவக்கத்தில் சந்திக்கும் இடர்பாடுகளைக் கொண்டு அவைகளை மறுப்பது என்பது நம்மை பின்நோக்கி இழுப்பதற்கு சமமாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வளர்ச்சிக்கான படிகளாகும்.. அறிவியல் உருவாக்கித் தருகின்ற வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமையாகும். அந்த வகையில் தற்போது நமக்கு ஆக்கி அளித்திருப்பது களஞ்சியம் என்ற மென்பொருளாகும். நமது உள்ளங்கையில் நமது ஓய்வூதியம் பற்றிய அனைத்து விபரங்களும். புத்தகம் போல பெரிய வடிவத்தில் ஓய்வூதியம் வழங்கல் ஆணை (PPO-Pension Payment Order) என்று இருந்த நிலையில் வேறுபட்டு அனைத்தும் நமது கையடக்க செல்லிடப்பேசியில் ஒளிர்கின்றது. பயன்பாட்டுக்கு வந்த ஆரம்ப நிலையில் தவறுகளும் செயல்படாமையும் ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டது உண்மையே, ஆனல் இப்போது அத்தவறுகள் களையப்பட்டு இலகுவாக நம்மால் செயல்படுத்தமுடிகிறது. மிகக்குறைந்த அளவே மிடுக்குப்பேசியின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் கூட சிறப்பாக களஞ்சியம் மென்பொருளை பயன்படுத்த முடியும் என்ற நிலை தற்போதுள்ளது.

ஏற்கனவே, IFHRMS ல் பதிவுகள் ஏற்றப்பட்ட ஓய்வூதியர்களின் சுயவிவரங்கள் களஞ்சியம் மென்பொருளில் தெளிவாக காட்டப்படும். தொடர்ச்சியாக மாத ஓய்வூதியம், ஆண்டுக்கான மொத்த ஓய்வூதியம், வருடாந்திர நேர்காணல், ஒரு கருவூலத்திலிருந்து மற்றொரு கருவூலத்திற்கு மாறுதல், பண்டிகை முன்பணம் பெறல், வாரிசுகளின் பெயர்குறிப்பு, வருமான வரி போன்ற பலவகை உதவிகள் இந்த மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். அதில் சில உதவிகள் இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது. ஆனல் மிக அத்தியாவசியமான உதவிகள் சிறப்பாக செயல்படுகிறது. ஆகவே அனைத்து ஓய்வூதியர்களும் களஞ்சியம் மென்பொருளை பதிவிறக்கி செல்பேசியில் பதிந்து கொள்ள வேண்டுகிறேன். உதவிக்கு தங்களது படித்த அல்லது படித்துக்கொண்டு இருக்கும் மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி போன்றவர்களை பயன்படுத்துங்கள். அல்லது கணினி பற்றி அறிந்த சக ஓய்வூதியர்களின் உதவியை நாடுங்கள். நமக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் முழுவதுமாக பயன்படுத்துங்கள், குறை நிறைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இம் மென்பொருளை மேம்படுத்த முடியும்.என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி நிறைவு செய்கிறேன். நன்றி

                                                                 

                                                                                            

 

 

 

Wednesday, June 26, 2024

இந்தியப் பாராளுமன்ற தேர்தல்.

 இந்தியாவின் தேர்தல் வரலாறு நமக்கு சொல்ல வருவது என்ன?

 இந்திய பாராளுமன்றம் தனது ஜனநாயக கடமையின் ஒரு பகுதியாக 7கட்ட தேர்தலை நடத்தி முடித்து ஜூன் மாதம் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. ஆனால் கடந்த காலங்கள் மாதிரியல்லாமல் இன்று பதவியேற்றுள்ள அரசு ஒரு சிறுபான்மை அரசாக உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது.

2014 மற்றும் 2019 ஆண்டுகளில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த அரசு தனது தவறுகளின் காரணமாக மக்களின் ஆதரவினை இழந்து கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. எதிர் கட்சிகளே இல்லை என்ற நிலை மாறி பலமான எதிர் கட்சிகளின் கூட்டணி யானை பலம் பெற்று பாரளுமன்றத்தை நிரப்பியுள்ளது. அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் எதிர் கட்சிகளின் தொடர்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தவிக்கின்றது. அதிலும் மிகவும் முக்கியமானதும், இந்திய வரலாற்றில் இல்லாததும் நடைபெற்றுள்ளது. 

ஆம் நண்பர்களே, பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு நடந்து முடிந்த தேர்தல். அது எவ்வாறு நடைபெற்றது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம். அடுத்த பதிவில்.........




Wednesday, May 31, 2023

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தள்ளிவழங்குவது ஏன்? பகுதி-2



வர்க்கம் என்றும், போரட்டம் என்றும் சங்கங்களும் கட்சிகளும்  கற்றுக்கொடுத்த பாடத்தை 80விழுக்காடு ஏழை, எளிய மக்களின் மீது செயல்படுத்த முனைகிறீர்கள். கற்றறிந்தவர்கள், இடைதட்டுமக்கள் ஆகிய நீங்கள் எங்களின் பாதுகாப்பு அரணாக, எங்களின் உரிமைகளை கேட்டுப்பெறுவதற்கு உந்துசக்தியாக, வழிநடத்துனராக இருப்பதற்குப் பதிலாக, யாருக்கோ வந்தது எனக்கென்ன என்ற மன நிலையில் பேசுவது நியாயமா. மேலும் மூச்சுக்கு மூச்சு அந்த அரசாங்கத்தை நாங்கள் தோற்கடித்தோம், இந்த அரசாங்கத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என சிறுபிள்ளை தனமாக பேசுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. உங்கள் கூற்றுப்படியே பேசினாலும் 7 கோடி தமிழ் மக்களில் உங்களுடைய சதவிதம் எவ்வளவு. உங்களது குடும்ப உறுப்பினர்களை சேர்த்து 30லட்சம் என்றாலும் கூட ஒரு அரசை தேர்வுசெய்ய போதுமானதா என்பதை உணருங்கள். கடந்த பத்தாண்டுகள் தமிழ்நாடு சீரழிந்து சின்னாபின்னமாகி விட்ட நிலையில் அதை சரிசெய்ய புதிய அரசு கடுமையாக முயற்சிகின்ற வேளையில் நமது பங்காக ஏதாவது செய்யக்கூடாதா. தேர்தல் அறிக்கையில் சொல்லியாச்சு உடனே செய் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது. தேர்தல் அறிக்கையில் உங்களுடய கோரிக்கை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது போல பேசுவது நியாயமா?. அரசும் மறுக்கவில்லை கால அவகாசம் வேண்டுகிறது. மக்களுடன் இணைந்து மக்களுக்காக இருப்பதை உணர்த்துங்கள் மக்களும் உங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள உதவுவார்கள். உங்கள் மேல் மக்களுக்கு இருக்கும் வெறுப்பை கோபமாக மாற்றிவிடாதீர்கள். 

இது அவரின் கருத்தாகமட்டும் நான் பார்க்கவில்லை,  இன்றுள்ள மக்கள் திரளின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும்.

Wednesday, August 25, 2021

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தள்ளிவழங்குவது ஏன்? பகுதி-1

ஒன்றிய அரசு அகவிலைப்படி வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், மாநில அரசும் வெளியிடும் என பணியாளர்களும், ஓய்வூதியர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மேலும் காலதாமதம் ஆகும் என்ற அறிவிப்பு, அவர்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கால தாமதத்திற்கான விளக்கத்தினை நிதி அமைச்சர் அவர் வளர்ந்துவந்த வர்க்க உணர்வுடன் அறிவித்து விட்டார். சொல்லுகின்ற மொழியில் பாசாங்குத்தனம் கலக்காமல் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டார். இன்று தமிழ்நாட்டில் இது தொடர்பான காரசாரமான விவாதங்கள், அவரின் கூற்றை ஒட்டி வெட்டி, சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது.

மதுரையில் நண்பரின் இல்ல விழாவிற்கு, இரட்டை மனதுடன் கலந்துகொண்டேன், (கொரானா பெரும்தொற்று காரணம்) விழாவில் அவரின் உறவினர் ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர் அருகில் அமர்ந்து இருந்தார். நலம்விசாரிப்புக்கு பின்னால் நிதியமைச்சரின் அறிவிப்பு பற்றி பேசத்தொடங்கினார் என்பதை காட்டிலும் கேள்வி கணைகளை தொடுத்தார் என்பதே சரியாகும். 

தற்போது ஆட்சியில் உள்ள ஒன்றிய அரசு மேற்கொண்ட அரசியல், பொருளாதார நடவடிக்கையினால் சிறு மட்டும் குறு நிலைப்பட்ட தொழில்கள் முடங்கியதால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிர்கதியாக தெருவில் குடும்பத்துடன் அலைந்தபோது உங்களின் நிலை என்னவாக இருந்தது. உங்களுக்கான சமூக பாதுகாப்புடன் குறைந்தபட்ச தேவைகளை சிரமமின்றி பூர்த்தி செய்து கொண்டீர்கள். 

பெட்ரோல் டீஸல் விலை உயர்வினால் அனைத்து பொருள்களும் விலையேற்றம் பெற்று ஒரு வேளை சோற்றுக்கே திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டபோது நீங்கள் வழக்கம்போல் குறைந்த பாதிப்புடன் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தீர்கள். இதற்கும் மேலாக பெரும்தொற்று காலத்தில் லாக்டவுன் என்ற பெயரில் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஏராளம். உண்ண உணவும் தண்ணீரும் இல்லாமல் பல்லாயிரம் கிலோமீட்டர் நடைபயணமாக வறியோர், முதியோர், குழந்தைகள் பெண்கள், ஊனமுற்றோர் நடந்து,வழியில் பலர் மடிந்து,பரிதவித்தபோது பாதுகாப்புடன் லாக்டவுனை கடந்தீர்கள். இரண்டாவது தொற்று முனைப்புடன் தாக்கி எங்களை கபளிகரம் செய்தபோது அதுபற்றி எவ்வித சிந்தனையின்றி சமூக உணர்வின்றி கடந்து சென்றீர்கள். 

பெருந்தொற்று, வேலையிழப்பு பசி பட்டினி என்று நாங்கள் உழன்று கொண்டு இருந்தபோது, வேலைக்கே செல்லாமல் லட்சத்தில் ஊதியம் பெற்றுவந்த ஆசிரியப் பெருமக்கள் நீதிமன்ற பாதுகாப்பினை பெற்று நெருக்கடி நிலையில் குறுகிய காலத்திற்கு( மீண்டும் வழக்கமாக பள்ளிகள் செயல்படும் வரை) மேற்கொள்ளலாம் என்று முயற்சித்த ஊதியக்குறைப்பை தடுத்து நிறுத்தினர். 
-தொடரும்....

Monday, August 23, 2021

வரி வருவாயில் எங்களது பங்குதான் எவ்வளவு?

 இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாடு மக்கள் தங்களுக்கு தேவை ஒரு மாற்றம் என சிந்தித்து தேர்தலில் வாக்களித்தார்கள். திராவிட முன்னேற்ற கழகமும் சிறப்பான வெற்றியை பெற்று ஆட்சியிலும் அமர்ந்தார்கள். பதவியேற்ற நாளில் பெறுந்தொற்று மக்களை மிரட்டிக்கொண்டு முன்னேறியது. அனைத்து முயற்சிகளால் அதை முறியடித்து வெற்றிகண்டது அரசு. அதை தொடர்ந்து மெலும் பல நற்திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நற்பெயரினை ஈட்டியுள்ளது. 

இவ்வரசின் தேர்தல் அறிக்கையில் அரசுப்பணியாளர்களின் அகவிலைப்படி மற்றும் பழைய ஓய்வு ஊதிய மாற்றம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிக்கைகள் மறுக்கப்படும் நிலை அப்பகுதியினரிடம் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது. அவர்களுடன் இணைந்த ஓய்வூதியர்களின் நிலை கவலை அளிக்கும்படி உள்ளது. தமிழ் நாடு நிதியமைச்சர் அரசின் வருவாயில் ரூபாய் ஒன்றுக்கு, அரசுப்பணியாளர் ஊதியம் மற்றும் இதர செலவினமாக 60பைசா           (ரூ1க்கு 60பைசா) எனப்பேட்டியளித்துள்ளார். கடந்த காலத்திலும் இம்மாதிரியான அறிக்கைகளும் பேட்டிகளும் வெளியிடப்பட்டுள்ளதை இந்நாடு நன்கறியும். 

அப்படியானால் வாழ்நாள் அனைத்தையும் அரசுக்கும், மக்களுக்குமாக செலவிட்ட அரசுப்பணியாளர், மற்றும் ஓய்வுதியர் ஆகியோருக்கு மக்கள் அளிக்கும் வரியில்  என்ன பங்கு என்பதையாவது சொல்லிவிடுங்களேன்.

இப்படிக்கு ஏமாற்றத்துடனும், எதிர்பார்ப்புடனும் உள்ள அரசு பணியாளர்கள்