வர்க்கம் என்றும், போரட்டம் என்றும் சங்கங்களும் கட்சிகளும் கற்றுக்கொடுத்த பாடத்தை 80விழுக்காடு ஏழை, எளிய மக்களின் மீது செயல்படுத்த முனைகிறீர்கள். கற்றறிந்தவர்கள், இடைதட்டுமக்கள் ஆகிய நீங்கள் எங்களின் பாதுகாப்பு அரணாக, எங்களின் உரிமைகளை கேட்டுப்பெறுவதற்கு உந்துசக்தியாக, வழிநடத்துனராக இருப்பதற்குப் பதிலாக, யாருக்கோ வந்தது எனக்கென்ன என்ற மன நிலையில் பேசுவது நியாயமா. மேலும் மூச்சுக்கு மூச்சு அந்த அரசாங்கத்தை நாங்கள் தோற்கடித்தோம், இந்த அரசாங்கத்தை நாங்கள்தான் உருவாக்கினோம் என சிறுபிள்ளை தனமாக பேசுவதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. உங்கள் கூற்றுப்படியே பேசினாலும் 7 கோடி தமிழ் மக்களில் உங்களுடைய சதவிதம் எவ்வளவு. உங்களது குடும்ப உறுப்பினர்களை சேர்த்து 30லட்சம் என்றாலும் கூட ஒரு அரசை தேர்வுசெய்ய போதுமானதா என்பதை உணருங்கள். கடந்த பத்தாண்டுகள் தமிழ்நாடு சீரழிந்து சின்னாபின்னமாகி விட்ட நிலையில் அதை சரிசெய்ய புதிய அரசு கடுமையாக முயற்சிகின்ற வேளையில் நமது பங்காக ஏதாவது செய்யக்கூடாதா. தேர்தல் அறிக்கையில் சொல்லியாச்சு உடனே செய் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது. தேர்தல் அறிக்கையில் உங்களுடய கோரிக்கை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது போல பேசுவது நியாயமா?. அரசும் மறுக்கவில்லை கால அவகாசம் வேண்டுகிறது. மக்களுடன் இணைந்து மக்களுக்காக இருப்பதை உணர்த்துங்கள் மக்களும் உங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள உதவுவார்கள். உங்கள் மேல் மக்களுக்கு இருக்கும் வெறுப்பை கோபமாக மாற்றிவிடாதீர்கள்.
இது அவரின் கருத்தாகமட்டும் நான் பார்க்கவில்லை, இன்றுள்ள மக்கள் திரளின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும்.
No comments:
Post a Comment